சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் கில் களமிறங்குவதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது தசைபிடிப்பு காரணமாக சிறிது நேரம் ஓய்வெடுத்த ரோகித் சர்மா, நேற்றைய பயிற்சியின்போது பேட்டிங் செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அவர் அடுத்த போட்டியில் ஓய்வெடுக்கலாம் என்று கூறப்படுகிறது. மறுமுனையில் சுப்மன் கில்லுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் நேற்றைய பயிற்சியின்போது மைதானத்திற்கே வரவில்லை என்று தெரியவந்துள்ளது. இது அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.