கிண்டி ரேஸ் கோர்ஸில் மார்ச் 1 மற்றும் 2-ம் தேதி, இந்தியன் டர்ஃப் இன்விடேஷன் கோப்பைக்கான தொழில்முறை குதிரை பந்தயம் நடைபெறவுள்ளது.
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேட்டியளித்த கிளப்பின் செயலாளர் நிர்மல் பிரசாத், 3 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இந்த பந்தயத்தில் நாடு முழுவதும் இருந்து 150 குதிரைகள், தலைசிறந்த ஜாக்கிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்கவுள்ளதாக கூறினார்.
வரலாற்றில் முதன்முறையாக இந்த பந்தயத்தில் 4 கோடியே 16 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், HSPL ROYAL ARION நிறுவனம் இதற்கு ஸ்பான்சர் செய்ய முன் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.