நெல்லையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கே.டி.சி.நகரில் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை நெல்லை ஆட்சியர் சந்தோஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து நெல்லை மாவட்ட தொழிலதிபர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது உற்பத்தி பொருட்களை வான் மற்றும் கடல்வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனியை திருச்செந்தூரில் உள்ள புனித அவதாரப் பதியில் ஆளுநர் ஆர்.என். ரவி வழிபட்டார்.
. அங்கு கொல்லம் 1008 ஆம் ஆண்டு தமிழ் மாதமான மாசி 20 ஆம் தேதியுடன் தொடர்புடைய 1833, மார்ச் 1-ஆம் தேதி பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு, மனிதகுலத்தை பல நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றவும், சனாதன தர்மத்தையும் அதன் முக்கிய மதிப்பான உலகளாவிய சகோதரத்துவத்தை மீட்டெடுக்கவும் அய்யா வைகுண்டர் ஆக அவதரித்தார் என அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
சகோதர, சகோதரிகளைப் போல ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடனும் இணக்கத்துடனும் வாழ்ந்து, இந்தியாவை உலகத் தலைவராக மாற்ற ஒன்றிணைந்து பாடுபட அய்யாவின் ஆசிகள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளளார்.