நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டா பகுதியில் அதிகாலை 2.51 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், இந்தியா, திபெத் மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிலநடுக்கங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் அதிகாரிகள் தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேபோல, பாகிஸ்தானிலும் காலை 5.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவாகி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.