மகா கும்பமேளாவில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு கூடுதல் போனஸாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் அறிவித்துள்ளார்.
அதேபோல, சுகாதார ஊழியர்களுக்கும் 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தூய்மை பணியாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஏப்ரல் மாதம் முதல் போனஸ் தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் தூய்மை பணியாளர்களின் ஊதியமும் 11 ஆயிரம் ரூபாயில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.