செபி எனப்படும் இந்தியப் பங்கு பரிவர்த்தனை அமைப்பின் தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
செபியின் தற்போதைய தலைவராக உள்ள மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதனையடுத்து, மத்திய நிதி மற்றும் வருவாய் துறை செயலராக உள்ள துஹின் காந்த பாண்டேவை செபி தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவர் 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.