போலி கிரிப்டோ நிறுவனத்திற்கு விளம்பரம் செய்தது தொடர்பாக நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில் போலி கிரிப்டோ கரன்சி மூலமாக 10 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் கோவையை சேர்ந்த நித்தீஷ் குமார், அரவிந்த ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலை வைத்து விளம்பரம் செய்து 60 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
விளம்பரத்தில் நடித்ததற்காக தமன்னா மற்றும் காஜல் அகர்வாலுக்கு தலா 25 லட்ச ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை அவர்களிடம் இருந்து திரும்ப பெற சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.