சென்னை திருமங்கலத்தில் இருந்து மாதவரம் நோக்கி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து மாதவரம் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கொளத்தூர் சிக்னல் பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள், மெட்ரோ பணிகளை துரிதப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் கோரிக்கை விடுத்தனர்.