சேலம் அருகே சட்டவிரோதமாக ஸ்கேன் மையத்தை நடத்தி கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என தெரிவித்த 7 செவிலியர்களை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், வீராணம் பகுதியில் உள்ள பசுபதி ஸ்கேன் மையத்தில் சுகாதாரத்துறை அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் சோதனை நடைபெற்றது.
அப்போது, அங்கு கருவில் உள்ள குழந்தைகள் ஆணா, பெண்ணா என்று கண்டறியும் பணிகள் நடந்து வந்ததும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர் ஆகியோர் இந்த ஸ்கேன் மையத்தை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும், கருவில் உள்ள சிசுவை கண்டறிந்து உறுதிப்படுத்த 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து மருத்துவர், செவிலியர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய 7 செவிலியர்களை சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.