தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட செயல் அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
காசிவிஸ்வநாதர் கோயிலில் ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் திருப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது.
இந்த முறைகேடுகளுக்கு கோயில் செயல் அலுவலர் முருகன் உடந்தையாக இருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் தற்போது செயல் அலுவலராக பணியாற்றி வந்த முருகன் சமயபுரம் கோயிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.