முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக, கேரள அரசுகளுக்கு அணை மேற்பார்வை குழு கடிதம் எழுதியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், அணையின் பாதுகாப்பு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக, கேரள அரசுகளுக்கு அணை மேற்பார்வை குழு கடிதம் எழுதியுள்ளது.
அதில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.