வீட்டில் இருந்து வெளியே வர சங்கடமாக இருந்ததால் படித்துப் பார்ப்பதற்காக சம்மனை தாம்தான் கிழிக்கச் சொன்னேன் என சீமான் மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.
சென்னை நீலாங்கரை இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
சம்மன் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி எனக்கு வந்தது என்றும், காவல் ஆய்வாளர் வரும்போது கையெழுத்திட்டு சம்மனை வங்கிக் கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தேன்.
சம்மன் கொண்டு வந்த காவல்துறையினர் எதுவுமே சொல்லாமல் வெளியில் சம்மனை ஒட்டி விட்டு சென்று விட்டனர் என தெரிவித்தார்.
காவல்துறையினர் ஒட்டி விட்டு சென்றதன் பிறகு அதனை நான் எடுக்கச் சொல்லி விட்டேன் என்றும் யாருமே இல்லாத வீட்டில் வந்து ஒட்டுவது போல ஒட்டி விட்டு சென்று விட்டீர்கள் என சீமான் மனைவி கயல்விழி கூறினார்.
நான் தான் கிழிக்கச் சொன்னேன், நான் படிப்பதற்காக கிழிக்க சொன்னேன் என தெரிவித்தார். திட்டமிட்டு தான் காவல்துறையினர் பாதுகாவலரை கைது செய்துள்ளனர் என்றும் நாங்கள் எப்போது சம்மனை கிழித்து இருந்தாலும் நீங்கள் இப்படி தான் செய்திருப்பீர்கள் என தெரிவித்தார்.
கல்யாணம் ஆனது முதல் சீமான் கைதாகி விடுவார், கைதாகி விடுவார் என்று தான் சொல்கிறார்கள் என்றும் நான் எல்லாத்துக்கும் துணிந்து தான் இருக்கிறேன் என தெரிவித்தார். உளவியல் ரீதியாக எங்களை Distrub செய்யவே இவ்வாறு செய்துள்ளனர் என சீமான் மனைவி கயல்விழி கூறினார்.
சம்மன் எங்களுக்கு தானே தவிர, மீடியா மூலமாக உலகத்திற்கு செல்வதற்காக அல்ல என கயல்விழி கூறினார். சிறைக்குச் செல்வது எங்களுக்கு பயம் இல்லை, எனது அப்பா சிறைக்கு சென்றதையும் நான் பார்த்திருக்கிறேன் என தெரிவித்தார்.
நான் தான் சம்மனை எடுத்து என்னிடம் தர சொன்னேன், சம்மனை கிழித்த நபரை ஃபோர்ஸ் அனுப்பி கைது செய்யும் அளவிற்கு என்ன குற்றம் செய்தார் என கயல்விழி கேள்வி எழுப்பினார்.
வீடு முற்றுகை இடப்போவதாக சில அமைப்புகள் முயற்சி செய்தபோது எங்கள் தம்பிகளின் கார் சேதப்படுத்தப்பட்ட போது குறித்து எஃப் ஐ ஆர் போட அவ்வளவு யோசித்தார்கள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என கயல்விழி கேள்வி எழுப்பினார்.
காவல்துறையினர் மீது அவ்வளவு மரியாதை இருந்தது, இப்படி நடந்து கொள்வார்கள் என்று நினைக்கவில்லை என தெரிவித்தார்.
காவல் ஆய்வாளர் பிரபின் ராஜேஷ் நான் தான் வீட்டில் இருக்கிறேன் என்று தெரிந்து தான் வந்துள்ளார். கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே வர முயற்சி செய்துள்ளார்கள்.
விட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் அருகில் உள்ள பூங்காவில் வைத்து அடித்து அதன் பிறகு தான் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் வீட்டுக்கு வந்து விடுவார்கள் என நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் அவர்களை ரிமேன்ட் செய்து விட்டார்கள் என தெரிவித்தார்.
மரியாதையாக பேசி உள்ளே வந்து எங்களிடம் பேசி இருக்கலாம் என்றும் என்னை கைது செய்யுங்கள் நான்தான் சம்மனை கிழிக்க சொன்னேன் என தெரிவித்தார்.
சட்டத்திற்கு புறம்பாக தவறு செய்திருந்தால் என்ன நடவடிக்கை வேணாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
நேற்று சிறிது நேரம் என்ன நடது என்று எனக்கு புரியவில்லை என்றும் எனது அண்ணன் ஏதேனும் தவறு செய்திருப்பார் நினைத்து தான் sorry சொன்னேன் என தெரிவித்தார்.
பயம் கொள்வதற்கு எதுவும் இல்லை, கட்டாயமாக சீமான் ஆஜராவார் ஒத்துழைப்பு கொடுப்பார் என தெரிவித்தார்.
35 லட்சம் வாக்குகள் வாங்கிய ஒரு தலைவரை பாலியல் குற்றம் என்று சொல்லி அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள் என தெரிவித்தார். சீமான் எங்கு இருக்கிறார் என எல்லோருக்கும் தெரியும் என்றும் சம்மன் வழங்கப்பட்ட பிறகு அது குறித்து நம்மிடம் கேள்வி கேட்பது முறையல்ல என தெரிவித்தார்.
நிறைய சம்மன் வருகிறது கேட்டை சுத்தம் செய்ய முடிய வில்லை, அதனால் தான் இன்று நோட்டீஸ் போர்டு வைத்தோம் என தெரிவித்தார்.
சம்மன் இதில் ஒட்டப்பட்டு விட்டால் உள்ளே எடுத்துச் சென்ற படித்துவிட்டு மீண்டும் வெளியில் வைத்து விடுவோம் என தெரிவித்தார்.
நடிகையை பின்புலத்திலிருந்து யார் இயக்குகிறார்கள் என செய்தியாளரின் கேள்விக்கு ஆளும் கட்சி தான் இயக்குகிறது என எல்லோருக்கும் தெரியும் என கயல்விழி தெரிவித்தார்.