ஜெயங்கொண்டம் அருகே புனித அந்தோணியார் தேவாலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிங்கராயபுரம் கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அன்னை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஸ்ரீஜா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பீரோ , சைக்கிள், சேர், டேபிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிக்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அரியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.