ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மகா சிவராத்திரி விழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
கமுதி அருகே புலாபத்தி கிராமத்தில் கருப்பணசாமி கோவில் மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்த மாட்டு வண்டிகளை சாலையின் இருபுறமும் நின்று கிராம மக்கள் உற்சாகப்படுத்தினர். ஒருசில பெண்கள் குலவையிட்டும் மாட்டு வண்டிகளை வரவேற்றனர். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 ஜோடி காளைகள் இப்போட்டியில் பங்கேற்றன.