நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், தாளடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 3ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை செய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, வாழக்கரை, கீழ்வேளூர், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால், தாளடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.