பிரபல பாப் பாடகியான கேட்டி பெர்ரி மற்றும் 2 பெண் செய்தியாளர்கள் குழுவினர் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் விண்கலம் மூலமாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த விண்வெளி பயண திட்டத்துக்கு ப்ளூ ஆரிஜின் என்.எஸ்.31 என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 1963-ம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற வலண்டீனா தெரஸ்கோவாவுக்கு பின்னர் பெண்கள் மட்டும் அடங்கிய ஒரு குழுவினர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
இவர்கள் நியூ ஷெபர்ட் விண்கலம் மூலமாக வரும் செப்டம்பர் மாதத்தில் விண்வெளிக்கு செல்லவுள்ளனர்.