சென்னை அண்ணா சாலையில் செயல்படும் போட்டித் தேர்வு பயிற்சி மைய கட்டடத்தில் லேசான அதிர்வு உணரப்பட்டதால், அங்கு பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள், இளம் பெண்கள் உடனடியாக வெளியேறினர்.
சென்னை அண்ணா சாலை தேனாம்பேட்டை அருகில் உள்ள ஜி.ஆர். காம்ப்ளக்ஸ் எனும் தனியார் கட்டடத்தின் ஐந்தாவது தளத்தில், தனியார் நிறுவனம் நடத்தும் போட்டித் தேர்வு பயிற்சி மையம் செயல்படுகிறது.
அந்தக் கட்டத்தில் லேசான அதிர்வு உணரப்பட்டதால், பயிற்சி மையத்தில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேறினர். இதனால் இன்றும், நாளையும் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அப்பகுதியில் நடைபெற்று வரும் பணி காரணமாக அதிர்வு நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.