பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டலையடுத்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த செய்தி கிடைத்தவுடன் தேவேந்திர பட்னாவிஸின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.