உத்தராகண்டில் பனிச்சரிவில் சிக்கிய 47 சாலை அமைக்கும் ஊழியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தோ – திபெத் எல்லை அருகே உள்ள உத்தராகண்டின் சமோளி மாவட்டத்தின் மனா கிராமத்தில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. சாலை பணியில் ஈடுபட்டிருந்த 57 ஊழியர்கள் இந்த பனிச்சரிவில் சிக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக் குழு, பனிச்சரிவில் சிக்கிய 10 பேரை மட்டும் மீட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.