வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்து வருகிறார்.
முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி போல் செயல்படுவதாக டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.
அப்போது, ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பின்போது கனிமவள ஒப்பந்தம், போர் நிறுத்தம் குறித்து டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.