இன்று பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன், ராதாகிருஷ்ணனுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்துது தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் எல். முருகன் விடுத்துள்ள பதிவில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். நல்ல உடல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் பெற்று மகிழ்வோடு வாழ, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்வதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், பொன். ராதாகிருஷ்ணன் நல்ல உடல் நலத்துடன், நீண்ட காலம் தமது மக்கள் பணி தொடரவும், தொடர்ந்து பல ஆண்டுகள் அனைவரையும் வழி நடத்தவும் இறைவனை வேண்டிக் கொள்வதாக கூறியுள்ளார்.