இனி மொழியை வைத்து பிரிவினை அரசியல் நடத்த முடியாது : வானதி சீனிவாசன் திட்டவட்டம்!
Aug 24, 2025, 06:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இனி மொழியை வைத்து பிரிவினை அரசியல் நடத்த முடியாது : வானதி சீனிவாசன் திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Mar 1, 2025, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிவினையை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேசிய கல்வி கொள்கை 2020′ நெகிழ்வுத் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தாய்மொழி, ஆங்கிலம், மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழியை படிக்கலாம் என்று கூறுகிறது. எந்த மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்கவில்லை. இது நன்கு தெரிந்தும், தமிழ்நாட்டின் மீது, மத்திய இந்தி மொழியை திணிப்பதாக, இல்லாத ஒன்றை வலிந்து தினந்தோறும் தொண்டர்களுக்கு கடிதம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.

இப்போது, உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான் என இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு விட்டது விஷமப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார் என கூறியுள்ளார்.

இதற்கு திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும், இந்தி பேசும் மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் பதிலளிப்பார்கள் என நம்புகிறேன்.

அன்னியர்கள் ஆட்சி இங்கு வரும் வரை இந்திய மொழிகள் இணைந்தே பயணித்துள்ளன. மதம் மாற்றவும், வணிகத்திற்காகவும் வந்த ஐரோப்பியர்கள் இங்கே வந்த பிறகு, இந்தியர்களை பிளக்கும் கருவியாக மொழியை பயன்படுத்த தொடங்கினர். அயர்லாந்தில் இருந்து, மதம் மாற்றுவதற்காக தமிழ்நாடு வந்த கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் வாயிலாக ஆரிய – திராவிட இனவாதம் என்ற நஞ்சை தமிழ் மண்ணில் விதைத்தார் என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரால் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்ட ஆரிய – திராவிட இனவாதம் என்ற பொய்யில் பிறந்ததுதான் நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திமுக போன்றவை. எனவே, திமுக பிறந்ததே பிரிவினையில்தான். அதனால் எப்போதுமே இந்திய தேசியத்தை ஏற்காமல் பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறது என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

இந்தியாவுக்கு தேசிய மொழி என்று எந்த மொழியும் இல்லை. இந்திய மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகள் என்றவர் ஆர்.எஸ்.எஸ். இரண்டாவது தலைவராக இருந்த குருஜி கோல்வால்கர். அதுதான் பாஜகவின் கொள்கை. பாஜகவைப் பொறுத்தவரை இந்திய மொழிகள் அனைத்தும் சமம். அதனால்தான் மூன்றாவது மொழியை தேர்வு செய்யும் உரிமையை அந்தந்த மாநிலங்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த உண்மையை திரித்து பாஜக அரசு இந்தியை திணிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிடுகிறார். இது தகவல் தொழில்நுட்ப யுகம். உண்மை எது என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் இருக்கும் மும்மொழி படிக்கும் வாய்ப்பு அரசு பள்ளிகளில் மட்டும் மறுக்கப்படுவது ஏன்? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் இருமொழி கொள்கை என்பது அரசு பள்ளிகளுக்கு மட்டும்தானா? திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்படுவது ஏன்? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர், அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகளின் குழந்தைகள் மட்டும் ஏன் மும்மொழிகள் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள்? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இருமொழி கொள்கையால்தான் தமிழ்நாடு வளர்ந்தது என்று திமுகவினர் பிரசாரம் செய்கிறார்கள். அப்படியெனில் மும்மொழி கொள்கையை பின்பற்றிய கர்நாடகம், ஆந்திரம், கேரளம், தெலுங்கானா, மகாராஷ்டிரம், கோவா, குஜராத், ஹரியாணா, டில்லி போன்ற மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தது எப்படி? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திராவிடம் திராவிட மாடல் என்று சொல்கிறது திமுக. ஆனால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மொழிகளை மூன்றாவது மொழியாக கற்ககூட மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசே உருது மொழி பள்ளிகளை நடத்தும்போது, திராவிட மொழிகளுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்மொழி கொள்கை பின்பற்றக்கூடிய பல மாநிலங்களில், அந்த மாநிலத்தின் தாய்மொழி 1 முதல் 10ம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் பள்ளிப்படிப்பை முடித்து விட முடியும் நிலை உள்ளதே ஏன்? என  கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்ற பல கேள்விகளை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் பதில் மட்டும் வரவில்லை. அதே நேரத்தில் இந்திய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பொய் பிரசாரம் செய்து வருகிறார். மொழியை வைத்து பிரிவினை அரசியலை இனியும் நடத்த முடியாது. பிரிவினையை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: dmk stalinnew education policyWe can no longer conduct divisive politics based on language: Vanathi Srinivasan's manifesto!வானதி சீனிவாசன்DMKtn bjp
ShareTweetSendShare
Previous Post

கடலூர் : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!

Next Post

திருச்சியில் 20 டன் பிளாஸ்டி கழிவுகள் அகற்றம்!

Related News

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies