கள்ளக்குறிச்சி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அண்ணா நகர் மேம்பாலம் வழியாக புதுச்சேரியில் இருந்து ஏற்காடு நோக்கி 5 பேருடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரின் பின்புறத்தில் இருந்து புகை வெளியேறி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியதால், கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி நின்றது.
தீ மளமளவென பரவி கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கிய நிலையில், காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.