உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலில் மாசி பெட்டிகள் எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலின் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 26ஆம் தேதி தொடங்கியது.
இதனை தொடர்ந்து, உசிலம்பட்டி சின்ன கருப்பசாமி கோயில் இருந்து ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகள் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டு சிவராத்திரி பூஜைகள் விமர்சையாக நடைபெற்றன.
சிவராத்திரி முடிந்த பின் உசிலம்பட்டி திரும்பிய மாசி பெட்டிகள் வடகாட்டுபட்டியில் வைத்து, மீண்டும் சின்ன கருப்பசாமி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
அப்போது, உசிலம்பட்டி நகர் பகுதியில் ஆணி செருப்பு அணிந்து பெட்டிகளை எடுத்த வந்த அய்யன் மற்றும் மாயாண்டி சுவாமிக்கு பூசாரிகள் மற்றும் நகர போலீசார் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
இறுதியாக பெட்டிகள் சின்ன கருப்பசாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.