கரூர் அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை வெறி நாய்கள் கடித்ததில், 15 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரமத்தியை அடுத்த நெடுங்கூர் பனம்பாளையம் கிராமத்தில் பரமசிவம் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு பரமசிவம் தூங்கிய நிலையில், வெறி நாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்ததாக கூறப்படுகிறது.
வெறி நாய்களின் தாக்குதலில் 15 ஆடுகள் உயிரிழந்த நிலையில், ஐந்து ஆடுகள் உயிருக்குப் போராடின. அப்பகுதியில் கடந்த 2 மாதங்களில் இதுபோன்று மூன்று முறை வெறி நாய்கள் ஆடுகளை கடித்ததாக, உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.