அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் யூடியூப்பில் ஒன்றரை கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அஜித்குமார் நடித்துள்ள புதிய திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத காரணத்தால் அஜித்தின் அடுத்த திரைப்படமான குட் பேட் அக்லி மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் டீசர் வெளியாகி யூடியூப்பில் ஒன்றரை கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
குட் பேட் அக்லி திரைப்பட டீசர் வெளியானதை தொடர்ந்து மதுரை சோலைமலை திரையரங்கில் ரசிகர்கள் உற்சாகமாக ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.