தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் அருவியில் நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.