அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரியலூர் ரயில் நிலையத்தில், திருச்சி நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது பயணி ஒருவரின் கையில் இருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சுமார் 77 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. ரயில்வே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த வினேத்குமார் என்பதும், ஹவாலா பணப் பரிமாற்றத்திற்கு இந்த பணம் கொண்டுவரப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து, வருமான வரிதுறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.