காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மளிகைக் கடையில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா, மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அவரது கடையில் ஆய்வு மேற்கொண்டபோது, பரண் மேல் போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. சுமார் 22 கிலோ அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜாவை கைது செய்தனர்.