உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமோலி மாவட்டம் மணா கிராமப்பகுதி அருகே பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலைப் பணி தொழிலாளர்கள் 55 பேர் பனிக்கட்டிகளுக்குள் புதைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த எல்லை பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
47 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமான நடைபெற்று வருகிறது.