திருச்சி RSS காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சி ஸ்ரீ சங்கரமட மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று கார்யகர்த்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார்.
காஞ்சி ஸ்ரீ சங்கரமட மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருச்சியில் உள்ள தென் தமிழக RSS காரியாலயத்திற்கு நேற்று விஜயம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விநாயகருக்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டார்.
தொடர்ந்து கோசாலை மற்றும் காரியாலயத்தில் உள்ள நூலகத்தையும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கார்யகர்த்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார்.
விழாவில் க்ஷேத்ர கார்ய காரணி சதஸ்ய ஸ்ரீ ராஜேந்திரன், பிராந்த பிரச்சாரக் ஸ்ரீ ஆறுமுகம், விபாக் சங்கச்சாலக் ஸ்ரீ சம்பத், திருச்சி நகர் சங்கச்சாலக் ஸ்ரீ ரஜினிகாந்த் மற்றும் ஸ்வயம் சேவகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.