மயிலாடுதுறை மாவட்டத்தின் நான்காவது ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஶ்ரீகாந்த் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக இருந்த மகாபாரதி, அண்மையில் 3 வயது சிறுமி குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மயிலாடுதுறையின் புதிய ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, நேர்முக உதவியாளர் முத்துவடிவேல் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.