திருப்பதி திருமலையில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்க வேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடுவுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு தலைவர் பி.ஆர். நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் கோயிலின் புனிதத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் உணர்வுகளை மனதில் கொண்டு, திருமலையில் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், திருமலை மலை பகுதியில் தாழ்வாகப் பறக்கும் விமானங்களால், கோயில் சுற்றியுள்ள புனிதமான சூழலுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.