பிரிட்டன் சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி அந்நாட்டு பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்தார்.
அப்போது பிரிட்டன் முழுவதும் உக்ரைனுக்கு முழு ஆதரவு வழங்குவதாக ஸ்டார்மர் உறுதி அளித்தார். மேலும், ரஷ்யாவின் சட்டவிரோத போரில் உக்ரைனுக்கு துணை நிற்போம் எனவும் உறுதியளித்தார்.
இதற்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி, போர் தொடங்கியதில் இருந்து இதுவரை ஆதரவு அளித்து வரும் ஸ்டார்மர் மற்றும் பிரிட்டன் மக்களுக்கு நன்றி எனகூறினார்.