பெண்களின் சபரிமலை என போற்றப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்தக் கோயில் திருவிழாவையொட்டி, கொடியேற்றம் நடைபெற்றது.
இதில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ், நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர். காந்தி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோயில் திருவிழாவையொட்டி வரும் 11 ஆம் தேதி கன்னியாகுமாரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மண்டைக்காடு மாசிக்கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் 650 போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும், குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க முதல்முறையாக ” hand band” அறிமுகம் செய்துள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.