நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்ந்துள்ளது.
தென் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.03 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 80.80 அடியாகவும், சேர்வல்லாறு அணையின் நீர்மட்டம் 93.57 அடியாகவும் உள்ளது. குறிப்பாக சேர்வலார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்ந்துள்ளது.
பாபநாசம் அணைக்கு சுமார் 1900 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணையில் இருந்து 1100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது .மணிமுத்தாறு அணைக்கு சுமார் 675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.