சீனாவின் ஸ்டார்ட்அப் நிறுவனமான, பீட்டாவோல்ட் (Betavolt) ஒரு அற்புதமான battery யை உருவாக்கியுள்ளது. இந்த battery ரீசார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை மின் திறன் அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நாணயத்தின் அளவை விட மிகrfசிறியதாக உள்ள BV100 என்ற சிறிய battery அணுசக்தி பேட்டரியாகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பீட்டாவோல்ட் என்பது ஒரு சீன ஸ்டார்ட் ஆப் நிறுவனமாகும். இந்நிறுவனம், புதிய அணுசக்தி பேட்டரியை உருவாக்கி உள்ளது. ஒரு நாணயத்தின் அளவை விட மிகச் சிறியதாக உள்ள இந்த battery BV100 என்று அழைக்கப்படுகிறது.
இது, 100 மைக்ரோவாட் மற்றும் 3 வோல்ட்ஆற்றலுடன் 120 முதல் மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைத் தாங்கக்கூடிய சிறிய 15 x 15 x 5 மில்லிமீட்டர் அளவிலான மிக சிறிய பேட்டரியாகும்.
வழக்கமாக ஸ்மார்ட்போன்களில் லித்தியம் பேட்டரி தான் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், இது உலகின் முதல் நியூக்ளியர் பேட்டரியாகும். அணுசக்தி பேட்டரி என்றும் சொல்லப்படுகிறது.
உலகின் முதல் மினியேட்டரைஸ் செய்யப்பட்ட அணுசக்தி அமைப்பு (world’s first miniaturized atomic energy system) என்று இந்த பேட்டரி புகழப்படுகிறது.
வேதியியல் மாற்றங்களை நம்பியிருக்கும் வழக்கமான பேட்டரிகளைப் போல் இந்த பேட்டரி இல்லை. இது 50 ஆண்டுகள் ஆயுள் கொண்ட கதிரியக்க ஐசோடோப்புக்களை (nuclear isotopes) இந்த பேட்டரி பயன்படுத்துகிறது.
பீட்டா துகள்களின் ஆற்றலை மின் சக்தியாக மாற்றுவதில் குறைக்கடத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக நிக்கல்-63 ஐ ஆற்றல் மூலமாகவும், வைர குறைக்கடத்தியை ஆற்றல் மாற்றியாகவும் இந்த அணுசக்தி battery பயன்படுத்துகிறது.
இதன் மூலம் இந்த அணு சக்தியால், அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது. எனவே, 50 ஆண்டுகளுக்கு சார்ஜ் செய்யாமல் அல்லது பராமரிப்பு இல்லாமல் நிலையான மின்சாரத்தை இந்த பேட்டரியால் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. பீட்டாவோல்ட் (Betavolt) உருவாக்கியுள்ள இந்த பேட்டரி தான் உலகின் முதல் அணுசக்தி பேட்டரியாகும்.
தனது முதல் அணுசக்தி பேட்டரியால் 100 மைக்ரோவாட் ஆற்றலையும், 3V மின்னழுத்தத்தையும் வழங்க முடியும் என்று பீட்டாவோல்ட் (Betavolt) கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 1 வாட் சக்தியுடன் கூடிய அணு சக்தி பேட்டரியை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதிக ஆற்றல் அடர்த்தி, நீண்ட கால சேவை, சிறிய அளவு, இலகுரக, எளிதான அமைப்பு மற்றும் செறிந்த ஒருங்கிணைப்பு போன்ற காரணங்களால், பீட்டாவோல்ட் (Betavolt) பேட்டரிகள் நுண்ணிய அணு ஆற்றல் துறையில் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் சிட்டிலேப்ஸ் என்ற நிறுவனம், 2010 ஆம் ஆண்டிலேயே முதல் ட்ரிடியம் ஐசோடோப்புகளைப் பயன்படுத்தி பீட்டாவோல்ட் பேட்டரிகளை உருவாக்கியுள்ளது. நானோவாட் முதல் மைக்ரோவாட் வரையிலான குறைந்த ஆற்றல் தேவைப்படும் சாதனங்களுக்கு மட்டுமே மின்சாரத்தை வழங்கும் வகையில், அமெரிக்கா இந்த பேட்டரிகளை உருவாக்கியுள்ளது. எனவே, அமெரிக்காவின் பீட்டாவோல்ட் பேட்டரிகள் பரவலாக மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
ஆனால் சீன நிறுவனம் தயாரித்துள்ள அணுசக்தி பேட்டரிகள், AI சாதனங்கள் , மருத்துவ கருவிகள் , மைக்ரோபிராசஸர் (microprocessors), சென்சார்ஸ் ( sensors), சிறிய ட்ரோன்கள், மற்றும் மைக்ரோ-ரோபோட்கள் (micro-robots) போன்ற பல பயன்பாட்டு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும் என்று கூறப்ப பட்டுள்ளது.
பீட்டாவோல்ட்டின் அணு ஆற்றல் பேட்டரிகள், நீண்டகால மின்சார விநியோகத்தை உறுதி செய்துள்ளதால், எதிர்காலத்தில் அனைத்து மின்னணு சாதனங்களில் இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்படும் என்று கூறப் பட்டுள்ளது.