மத்திய அரசின் CUET எனப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மே 8 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு CUET இளங்கலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்தல் தொடர்பான விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
மே 8 முதல் ஜூன் 1 வரை, இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 22 என்றும், விண்ணப்ப திருத்தம் மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.