உத்தரகண்டில் பனிச்சரிவில் சிக்கிய நான்கு பேரை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
உத்தரகண்டில் சமோலி பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு முகாமிட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு அமைப்பு தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், சுமார் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் ராணுவ ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.