அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
டொனால்ட் டிரம்ப் – ஜே.டி.வான்ஸ் உடனான சந்திப்பின் போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் இருவரும் ஆதிக்க தொனியில் பேசியதாக உக்ரைனியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சூழலில், அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற ஜே.டி. வான்ஸை கண்டித்து பதாகைகளை ஏந்தி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவுக்குள் சுற்றுலா மேற்கொள்வதை விட ரஷியாவுக்குச் சென்று குடும்பத்துடன் பனிச்சறுக்கில் ஈடுபடலாம் எனவும் எதிர்ப்பாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.