உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த மகா கும்பமேளாவில், குடும்பத்தில் இருந்து பிரிந்த 50 ஆயிரம் பக்தர்கள், மாநில அரசின் தீவிர முயற்சியால் மீண்டும் குடும்பத்துடன் ஒன்றிணைந்த நிகழ்வு நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்று முடிந்தது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில் 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
இதில் பங்கேற்க வந்திருந்த பக்தர்களில் பலர் எதிர்பாராத விதமாக தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்தனர். எனினும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சியால் 54 ஆயிரத்து 357 பக்தர்கள், தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தனர்.
கும்பமேளாவில் அமைக்கப்பட்ட சிறப்பு மையங்கள் மூலம், தன்னார்வலர்களின் உதவியுடன் இது சாத்தியமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.