குஜராத் மாநிலம் சோம்நாத்தில் உள்ள ஜோதிர் லிங்கத்திற்கு பூஜைகள் செய்து பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் முதல் தலமாக விளங்கும் சோம்நாத் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி, சோமநாதரை வழிபட்டார். அதனைத்தொடர்ந்து ஜோதிர் லிங்கத்திற்கு பால், தேன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்தார். இதையடுத்து பூக்கள் வைத்து அவர் வழிபட்டார்.
இதுதொடர்பாக பிரதமர் விடுத்துள்ள பதிவில், பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவுக்குப் பிறகு, 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான சோம்நாத்துக்குச் செல்வது என முடிவு எடுத்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் சோம்நாத் மந்திரில் பிரார்த்தனை செய்ய வாய்ப்பு கிடைத்தது பாக்கியமாக கருதுவதாகவும், ஒவ்வொரு இந்தியரின் செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்தனை செய்ததாகவு தெரிவித்துள்ளார். இந்தக் கோயில் நமது கலாச்சாரத்தின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தைவெளிப்படுத்துவதாகவும் மோடி கூறியுள்ளார்.