அனைத்து இந்திய மொழிகளுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கி கல்வி கற்பிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை சேர்ந்த சிலர், இதனை எதிர்ப்பதாக குற்றம் சாட்டியுள்ள தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையில் இந்தி மொழி மட்டும் கற்பிக்கப்படும் என்று மத்திய அரசு கூறவில்லை என தெரிவித்துள்ளார்.