டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேல் உபயோகத்தில் இருக்கும் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசைக் குறைக்கும் நோக்கில் பாஜக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தலைநகர் முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் மையங்களில் வரம்பை மீறும் வாகனங்களை அடையாளம் கண்டு எரிபொருள் நிரப்புவதைத் தடுக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.