காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் காமாட்சி உருவம் பதித்த கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மூலவர் சன்னதியில் உள்ள சிறிய கொடிமரத்திலும் கொடியேற்றப்பட்ட நிலையில், காமாட்சியம்மன் வீற்றிருந்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் பேரித்தாளம் வாசித்தனர்.
தொடர்ந்து இன்று முதல் 10 நாட்களுக்கு காமாட்சியம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
இதேபோல் காஞ்சிபுரம் யாதோத்த காரி பெருமாள் கோயிலில் 50 வருடங்களுக்கு பிறகு தெப்ப உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் யதோத்த காரி பெருமாள் தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.