கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவில் நகரமான கும்பகோணத்தில நடைபெறும் முக்கிய விழாவாக மாசி மக பெருவிழா விளங்குகிறது.
மாசி மகப் பெருவிழா இன்று காலை மகாமக குளக்கரை அருகே காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நந்தி கொடியேற்றத்துடன் துவங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 12ஆம் தேதி மகாமக குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறுகிறது.
இதேபோல், வியாழ சோமேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர்,அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர் ஆலயங்களிலும் இன்று மாசி மக பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.