சாயல்குடி அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிக்கல் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்வது வழக்கம்.
இந்நிலையில், அறந்தாங்கியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி செல்லும் அரசுப்பேருந்து கடந்த சில நாட்களாக சிக்கல் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லாதததால் அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் சிக்கல் கிராமத்தில் பேருந்து நின்று செல்லும் என ஓட்டுநர், நடத்துநர் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராம மக்களின் போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் – கன்னியாகுமரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.