விழுப்புரத்தில் காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்துகொடுத்து கொலை செய்ய முயன்ற காதலியை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தை சேர்ந்த ஜெயசூர்யா, சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். ரம்யா என்ற பெண்ணை காதலித்து வந்த இவர், திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்ததால் காதலை கைவிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரம்யா, தேநீரில் எலி மருந்து கலந்து ஜெயசூர்யாவுக்கு கொடுத்துள்ளார். தொடர்ந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயசூர்யா, காதலி தனக்கு விஷம் கலந்து கொடுத்ததை வெளியில் கூறாமல் மறைத்துள்ளார்.
இதனிடையே காதலி ரம்யா எலி பேஸ்ட் கொடுத்ததை விசாரணை மூலம் அறிந்த போலீசார், தலைமறைவாக உள்ள ரம்யாவை தேடி வருகின்றனர்.