பெண்களின் வளர்ச்சிதான் இந்தியாவை உலகின் குருவாக மாற்றும் என மாதா அமிர்தானந்தமயிஆசியுரை வழங்கினார்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற கர்மயோகினி சங்கமத்தில் ஆன்மீக குருவான மாதா அமிர்தானந்தமயி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்த வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி, ஜான்சி ராணி லட்சுமி பாய் போன்றோரை நினைவுகூறும் வகையில் நடத்தப்படும் கர்மயோகினி சங்கமத்தில் பங்கேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
பெண்கள் அர்ப்பணிப்புணர்வோடு செயல்படுவதை வரலாறும், நிகழ்காலமும் நமக்கு உணர்த்தியிருப்பதாக கூறிய அவர், பெண்களின் வளர்ச்சிதான் இந்தியாவை உலகின் குருவாக மாற்றும் எனவும் அருளாசி வழங்கினார்.