திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுப முகூர்த்த தினம் என்பதால் திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகளும், திருமணங்களும் நடைபெற்றன.
இவற்றில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால், இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.